3rd December 2021

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மெயின் ரோட்டில் ஒரு கேட்டரிங் சர்வீஸ் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மயிலாடுதுறை வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் அரவிந்தன்(வயது 22) என்பவர் கடந்த 2 மாதங்களாக மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு முதல் அரவிந்தனை காணவில்லை. இதனால் அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு கேட்டரிங் சர்வீஸ் அலுவலக மாடியில் துர்நாற்றம் வீசுவதாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அலுவலக மாடியில் அரவிந்தன் பிணமாக கிடந்தார். அவரது அருகில் 2 பூச்சி மருந்து (விஷம்) பாட்டில்கள் கிடந்தது.

அரவிந்தன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து மயிலாடுதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது கேட்டரிங் அலுவலக உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாருடன், அரவிந்தனின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர்.

இதையடுத்து அரவிந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரவிந்தன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி உள்பட பலர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அரவிந்தன் உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

You cannot copy content of this page