71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் ‘லூர்து நகர்’ என அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகளும் வந்து செல்வார்கள்.

கொரோனா 2-வது அலை மிக தீவிரமாக பரவி வந்ததால் தமிழகத்தில் ஆலயங்களில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், மத கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி காலை 6 மணி வரை ஆலயங்களில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா தொற்று குறைந்ததால் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந்தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பேராலயம் திறக்கப்பட்ட 5 நாட்கள் வரை பக்தர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் 71 நாட்களுக்கு பிறகு வேளாங்கண்ணியில் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. பேராலய வளாகம் மற்றும் கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் வேளாங்கண்ணி மாதா குருக்கள்கள் தங்கும் விடுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

More News

தரங்கம்பாடியில் மயிலாடுதுறை மாவட்ட 20 மீனவ கிராமம் ஆலோசனை கூட்டம்

admin See author's posts

“வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” – பவானி தேவி உருக்கம்

admin See author's posts

அமெரிக்கா : மணல் புயலால் அடுத்தடுத்து மோதிக் கொண்ட வாகனங்கள் – விபத்தில் 7 பேர் பலி

admin See author's posts

2.4 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

admin See author's posts

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து!

admin See author's posts

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு!

admin See author's posts

மத்திய அரசு பணியில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?

Rathika S See author's posts

முதுபெரும் தமிழறிஞர் புலவர் இளங்குமரனாரின் மறைவு தமிழ்மொழிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் : மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

Rathika S See author's posts

பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்… செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிட திட்டம்!

admin See author's posts

முதுபெரும் தமிழ் புலவர் இளங்குமரனார் காலமானார்…!

admin See author's posts

You cannot copy content of this page