25th September 2021

ராணுவ அலுவலகத்தில் சிவில் இன்ஜினியர்களுக்கு வேலை

பூனேயில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்தில் கீழ்க்கண்ட பணிக்கு தேவையான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Sub Divisional Officer

காலியிடங்கள்: 13(UR – 4, OBC – 5, EWS – 2, ST – 2)

சம்பளவிகிதம்: 7.வது ஊதியக்குழு பரிந்துரைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு: 31.8.2019 தேதிப்படி 19 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 10.ம் வகுப்பு தேர்ச்சியுடன் Surveying/Draftsmanship (Civil).ல் டிப்ளமோ சான்றிதழ் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் தொழில் திறன் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத்தேர்வில் General Knowledge, General English, Technical Knowledge பாடப்பிரிவுகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

ரூ. 100 இதனை “PRINCIPAL DIRECTORATE DEFENCE ESTATES SOUTHERN COMMAND PUNE” என்ற பெயரில் பூனேயில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் SC / ST /EX -SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் www.dgde.gov.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை டவுண்லோடு செய்து பூர்த்தி செய்து DD மற்றும் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களை இணைத்து சாதாரண தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்பும் கவரின் மீது “APPLICATION FOR THE POST OF SUB DIVISIONAL OFFICER, GRADE – II” என்று குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal Director,

Defence Estates,

Southern Command,

Near Echs Polyclinic,

Kondhwa Road,

Pune Maharashtra – 411 040.

விண்ணப்பங்கள் தபால் மூலம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்20.10.19

Leave a Reply

You cannot copy content of this page