3rd December 2021

சர்வதேச திறன் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்- நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்

சர்வதேசத் திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் டிசம்பர்-2019 அன்று நடைபெறும் மாவட்ட அளவிலான தொடக்கநிலை திறன் போட்டிகளில் பங்கேற்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசத் திறன் போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்கநிலையில் நடைபெறவுள்ள மாவட்டஅளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க https://worldskillsindia.co.in/worldkill/world/ என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

6 துறைகளில் உள்ள 47 தொழிற் பிரிவுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற உள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 25.11.2019. வயதுவரம்பு 01.01.1996 அன்றும், அதற்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 01.01.1996 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்களாவர்.

ஐந்தாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரைக் கல்வித் தகுதி பெற்றவர்கள் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்துகொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம், தொழிற் நுட்பகல்லூரி மற்றம் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள், தொழிற் சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகியகால தொழிற் பயிற்சி பெற்றவர்கள் ஆகியஅனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மேலும் விவரங்களைஅறிந்துக் கொள்ள,மேற்கண்ட இணையதளத்தின் வாயிலாகவும், சு.செந்தில்குமாரி உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம்,நாகப்பட்டினம் என்ற முகவரியில் நேரிலும் அணுகலாம்.

 

Leave a Reply

You cannot copy content of this page