பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம்! ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படும் – அமைச்சர் மூர்த்தி!

தமிழக சட்டப்பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான வணிக வரி மற்றும் பதிவுத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டசபையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்ட அறிவிப்பு:-அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும்.தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும். முதல் கட்டமாக 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும்.

சென்னை மற்றும் மதுரையில் இரண்டு பதிவு மண்டலங்கள் உருவாக்கப்படும்.சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை மையமாக வைத்து கூடுதலாக ஒரு புதிய மண்டலம் அமைக்கப்படும்.

பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும். சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page