IPL 2021 : KKR அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா… இன்றைய போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா இரண்டாம் அலையின் நடுவே இவ்வளவு நாட்களாக தடங்கல் இல்லாமல் நடந்துவந்த ஐபிஎல் போட்டிகளுக்கு இன்று பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே இன்று இரவு அஹமதாபாத்தில் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், தற்போது பயோபபுளுக்குள் இருந்த கொல்கத்தாவின் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் இன்றையைப் போட்டியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் தோளில் ஏற்பட்ட காயத்துக்கு ஸ்கேன் எடுப்பதற்காக வருண் சக்ரவர்த்தி பயோபபுளைவிட்டு மருத்துவமனைக்குச் சென்றதாகத் தெரிகிறது. மருத்துவமனை மூலம் அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்றும், வருண், சந்தீப்பைத்தவிர வேறு யாருக்கும் கொல்கத்தா அணியில் கொரோனா பாதிப்பு இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பது தொடர்ந்து ஐபிஎல் நடக்குமா என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது. கடந்த பிப்ரவரி – மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீகில் இதேபோன்று வீரர்களுக்கு கொரோனா பரவியதால் தொடரே பாதியில் நிறுத்தப்பட்டது. அதுபோல் ஐபிஎல் தொடரும் நிறுத்தப்படலாம் என்கிற செய்திகள் இப்போது பரவ ஆரம்பித்திருக்கின்றன.

ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ, ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு தொடர்பாக எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

Source: விகடன்

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page