3rd December 2021

ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைப்பு: பிசிசிஐ

கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியர், சிஎஸ்கே பந்துவீச்சுப் பயிற்சியாளர் எல். பாலாஜி, பேருந்துப் பராமரிப்பாளர் ஆகியோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் இரு அணி வீரர்களும் விடுதி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதையடுத்து கொல்கத்தா – பெங்களூா் அணிகள் நேற்றிரவு மோத இருந்த ஆட்டமும் நாளை நடைபெறுவதாக இருந்த சிஎஸ்கே – ராஜஸ்தான் ஆட்டமும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு சன்ரைசர்ஸ் அணியையும் விட்டுவைக்கவில்லை. அந்த அணியின் விக்கெட் கீப்பர் சஹா, கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த மும்பை – சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருந்தது. தில்லி வீரர் ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

கரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் ஐபிஎல் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது குறித்த கேள்விகளும் எழுந்தன. இதையடுத்து கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் 2021 போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தகவல் அளித்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

You cannot copy content of this page