தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகிறதா ? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது !!

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டை விட வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அளவில் ஒவவொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-ஐ தாண்டியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் மேலும் பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதக்கூட்டங்கள், வழிபாடுகள், திருவிழாக்கள், பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, உணவகங்கள், டீக்கடைகள், வணிக வளாகங்களில் 50 சதவீத அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் கடந்த 10ஆம் தேதி முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேர ஊடங்கு மட்டுமின்றி ஜிம், பூங்காக்களை முழுமையாக மூடுவது குறித்தும் முடிவெடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Source:https://m.dailyhunt.in/news/india/tamil/newstm-epaper-newstm/tamizhakathil+iravu+nera+ooradangu+amalakiratha+viraivil+arivippu+veliyakirathu-newsid-n271627410

More News

சென்னையை சேர்ந்த வெள்ளி பதக்கம் வென்ற உலக ஆணழகன் செந்தில்குமரன் மாரடைப்பால் காலமானார்

admin See author's posts

மயிலாடுதுறை ஜேசிஐ டெல்டா சார்பில் கபாசுரக் குடிநீர்

admin See author's posts

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி!

admin See author's posts

கொரோனா கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

admin See author's posts

கொரோனாவால் பலியான மதுரை கர்ப்பிணி மருத்துவர் சண்முகப் பிரியா-. முன்களப் பணியாளர்கள் கடும் அதிர்ச்சி

admin See author's posts

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி

admin See author's posts

தமிழகத்தில் வரும் 10ந் தேதி முதல் 24ந் தேதி வரை முழு ஊரடங்கு

admin See author's posts

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 197 பேர் உயிரிழப்பு

admin See author's posts

கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்தது கர்நாடக அரசு

admin See author's posts

புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமனம்

admin See author's posts

You cannot copy content of this page