30th November 2021

காவு வாங்க காத்திருக்கும் அய்யாவைனாறு பாலம். சீரமைக்க படுமா?


மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோவில் அருகிலுள்ள கீழையூரில் ஐம்பது வருடத்திற்கு முன் ஆற்றின் நடுவே இந்த பாலம் அமைக்கப்பட்டது. தற்போது தடுப்பு சுவர் ஏதும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் அய்யாவைனாறு பாலம் இருப்பதால் அவ்வழியே செல்லும் மக்கள் பெறும் அச்சத்துடனே பாலத்தை கடக்க வேண்டி இருக்கிறது. மேலும் தரங்கம்பாடி தாலுக்காவிலுள்ள கீழையூரையும் சீர்காழி தாலுக்காவயும் இனைக்கும் பாலமாக இருக்கும் இந்த ஆற்று பாலத்தில் 30 வருடத்திற்கு மேலாக மயிலாடுதுறையிலிருந்து கீழையூர் மார்க்கத்தில் தடம் எண் 384 என்ற அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

ஒரு வாகனமும் மற்றொரு வாகனமும் எதிராக மாறி செல்வதற்கு கூட பாலத்தின் அகலம் இல்லை. கீழையூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது .இதனால் கீழையூரை சுற்றியுள்ள பகுதியான பாகசாலை,செம்பதனிருப்பு,புதுப்பேட்டை,எருமல் போன்ற பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாலம் வழியாகத்தான் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

ஊராட்சி அமைப்பினரிடமும், கிராம நிர்வாக அலுவலரிடமும் கோரிக்கை வைத்து, கடந்த 5 வருடமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, போராடியும் பயன் இல்லை என்று ஊர் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செய்தி
இரா.கோகுல்ராஜ்
காவிரிக்கதிர் மாணவ பத்திரிகையாளர்

Leave a Reply

You cannot copy content of this page