2nd December 2021

ஜெயலலிதா, கருணாநிதி, அன்பழகன்… 9 எம்.எல்.ஏ-க்களை இழந்த 15-வது சட்டப்பேரவை

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில், அதிக இடங்களில் வென்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆனார். இதன்மூலம் எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஆட்சியை பிடித்தது இல்லை என்ற வரலாற்றை அவர் மாற்றினார்.

மற்றொரு புறம் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று, அதிக பலம் கொண்ட எதிர்கட்சியாக புதிய வரலாற்றை படைத்தது. இப்படி அசாத்தியங்களை சாத்தியமாக்கியபடி தொடங்கிய 15-வது சட்டப்பேரவை பேரிழப்புகளை எதிர்கொள்ள நேரும் என யாரும் நினைக்கவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட எம்.எஸ்.சீனிவேல், வாக்குப்பதிவு நடைபெற்ற மறுநாளே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தான் எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது தெரியாமலேயே அவர் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற அதிமுக எம்எல்ஏ ஏ.கே. போஸ், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி மாரடைப்பால் மறைந்தார்.

தனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிட்டு வென்ற முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அவர் காலமானார்.

2019ஆம் ஆண்டு மார்ச் 21- ஆம் தேதி சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்.அதே ஆண்டு ஜூன் 14ஆம் தேதி விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான ராதாமணி, உடல்நலக்குறைவால் மறைந்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி திமுக எம்எல்ஏ திருவொற்றியூர் கே.பி.பி. சாமி உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அதற்கு அடுத்த நாளே, அதாவது பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி குடியாத்தம் எம்எல்ஏ காத்தவராயன் மரணமடைந்தார்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுகவின் எம்எல்ஏவான ஜெ. அன்பழகன் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் 4 எம்எல்ஏக்களை திமுக இழந்துள்ளது. இத்தனை அதிகமான எம்எல்ஏக்களை, தற்போதைய 15-வது சட்டப்பேரவையைத் தவிர வேறு எந்த சட்டப்பேரவையும் இது போன்ற பேரிழப்பை சந்தித்தில்லை.

source

More News

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு !

admin See author's posts

டில்லியில் பெட்ரோல் விலை ரூ.8 குறைப்பு!

admin See author's posts

கலைஞரை போல ஸ்டாலினும் இதனை செய்ய வேண்டும்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: விவசாயிகளின் காப்பீடு தொகை மோசடி செய்ததாக வி.ஏ.ஓ. மீது புகார்!

admin See author's posts

அதிமுகவின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

admin See author's posts

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101 உயர்வு

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page