டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அசத்தும் ஜெயலலிதா நினைவிடம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள “அம்மா அருங்காட்சியகம்” மற்றும் “அறிவுசார் பூங்கா” ஆகியவற்றின் சிறப்பு அம்சங்கள் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 80கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பீனிக்ஸ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தில் உள்ளே வருவதற்கு ஒரு வழியும் வெளியில் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அவருடைய குழந்தை பருவம் முதல் அனைத்து புகைப்படங்களும் காலவரிசைப்படி வரிசை படுத்தப்பட்டுள்ளது.

அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அறிவுசார் பூங்காவிற்கு உள்ளே நுழைந்தவுடன் நவீன தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள் நம்மை வெகுவாக கவர்கிறது…

முதலில் “அம்மா என்னும் அற்புதம்” என்ற தலைப்பில் ஒரு பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மோஷன் கிராஃபிக் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் இளமைப் பருவம் முதல் இறுதி பருவம் வரையிலான வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள தொடுதிரை மூலமாக உள்ளீடுகளை கொடுத்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தது “சொல்லுங்கள் வெல்லுங்கள்” என்ற தலைப்பில் ஒரு பெரிய டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகளும், அதற்கான விடைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக “அம்மாவுடன் புகைப்படம்” இதுதான் இந்த அரங்கிலேயே மிகவும் பார்வையாளர்களை அதிகம் கவரக்கூடிய ஒரு இடம். இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள ஒரு கட்டத்தில், கேமராவை பார்த்து நிற்க வேண்டும். அப்போது கேமிரா தானாகவே Augmented Reality தொழில்நுட்பத்தில் புகைப்படத்தை எடுக்கும்.

பார்வையாளர்கள் இதன் முன் நின்று புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்கள் இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளும்படி புகைப்படம் டிஜிட்டல் வடிவில் நம் தொலைபேசி எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படுகிறது.

அடுத்ததாக “மக்கள் தாய்க்கு மலரஞ்சலி” என்ற தலைப்பில் Interactive colouring Application தொழில்நுட்பத்தில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில் பார்வையாளர்கள் தங்கள் முன் உள்ள தொடு திரையில் தெரியும் பூவை தேர்ந்தெத்தால், ஜெயலலிதா அவர்களின் மீது அந்த பூக்கள் விழும். அப்படி அந்த பூக்கள் விழும்போது பார்வையாளர்கள் தேர்ந்தெடுத்த பூக்களின் வாசம் அரங்கினுள் பரவும்… இது பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.

அடுத்ததாக “பொற்காலத்தில் சைக்கிள் பயணம்” என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கில் பெரிய திரை ஒன்று உள்ளது. அதன் அருகில் இருக்கக்கூடிய சைக்கிளில் ஏறி நாம் அதனை இயக்க ஆரம்பித்தவுடன் ஜெயலலிதா அவர்களுடைய திட்டங்கள் மற்றும் அவருடைய வரலாறு தொடர்பான தகவல்கள் ஒலி-ஒளி வடிவில் ரசித்தப்படி பல்வேறு இடங்களுக்கு பயணிக்கலாம் இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

வருங்கால தலைமுறையினர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு வரலாற்றையும் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு அரங்குகளாகவும், இன்னும் சுவாரசியமான பல காட்சி பதிவுகளும் இந்த ஃபீனிக்ஸ் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

You cannot copy content of this page