காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற லாரிகள் கவிழ்ந்து விபத்து!



காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே அதிக பாரம் ஏற்றிச் சென்ற 2 லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி கவிழ்ந்த விபத்தில், சிறிய காயங்களுடன் ஓட்டுனர்கள் உயிர் தப்பினர்.
சென்னை வண்டலூர்-வாலஜாபாத் சாலை வழியாக ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு சென்ற லாரிகள் சாலமங்கலம் அருகே முன்சென்ற ஒரு லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மோதியதில் அருகில் இருந்த ஐஸ்கிரீம் கம்பெனியின் சுற்றுசுவரை உடைத்து கவிழ்ந்து லாரியில் நிரப்பப்பட்டிருந்த ஜல்லி கற்கள் சாலையில் சிதறின.
தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரனையில், அதிக பாரத்துடன் போட்டிபோட்டு கொண்டு அதிவேகமாக லாரியை இயக்கியதே விபத்திற்கு காரணம் என தெரிவித்தனர்.
Advertisement