கேரளாவில் தவித்தவர்கள் சொந்த ஊர்(மயிலாடுதுறை பகுதிகளுக்கு) திரும்பினர்!

கேரளாவின் பாலக்காடு அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 86 பேர் ஊரடங்கு உத்தரவின் காரணமாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, தங்களை சொந்த ஊர் திரும்ப உதவுமாறு சில நாட்களுக்கு முன் கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டனர். இதையடுத்து, சம்பந்தபட்டவர்களுடன் தொடர்பு கொண்டு பேசிய மயிலாடுதுறை ‘காவிரி’ மற்றும் ‘செய்திக்கதிர்’ குழுவினர், அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி ஐ.ஏ.எஸ் அவர்களை சந்தித்து கேரள மாநிலத் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பி.சரவணன், மா.பேச்சிமுத்து ஆகியோர் மனு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாலக்காடு மாவட்ட நிர்வாகத்துடன் அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருந்து மீட்பு நடவடிக்கையில் துரிதப்படுத்தினர். மேலும் பொள்ளாச்சி பழனிசாமி மீட்கும் முயற்சியில் உறுதுணையாக இருந்தார். இதன் பலனாக 3 கேரள அரசுப் பேருந்துகளின் மூலம் 86 பேரும் இன்று காலை மயிலாடுதுறை வந்து சேர்ந்தனர்.

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page