19th January 2022

`கொள்ளிடம் ஆற்றில் கதவணை!’ – முதல்வரின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக டெல்டா பகுதிகளில் மழைப்பொழிவு படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும் மேட்டூர் நீர்பிடிப்பு பகுதியிலும் மழைப்பொழிவு குறைந்ததால் வருடம்தோறும் பாசனத்துக்கு வந்து சேர வேண்டிய தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து போனது.

பெரும்பாலும் வறண்டே இருக்கும் கொள்ளிடம் ஆற்றின் பல இடங்களில் குவாரிகள் அமைத்து, அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததால் ஆங்காங்கு பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்ளே புகுந்தது. கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டு வரும் தோட்டப்பயிர்களில் தற்போது 90% பயிர்களை பயிரிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கத்திரி, வெண்டை , மிளகாய், மரவள்ளி கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் செய்து வந்த ஆற்றின் கரையோர கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதேபோல், மல்லிகை, முல்லை, காக்கத்தான், சாமந்தி உள்ளிட்ட பூச்செடிகள் பயிரிடப்படுவதும் குறைந்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் உவர் நிலங்களாக மாறி வருகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் உரிய இடங்களில் தடுப்பணை கட்ட கோரி விவசாயிகள் சார்பில் பலமுறை போராட்டங்கள் நடத்தியும் கடந்த காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சட்டமன்றத்தில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

“கதவணை கட்டுவதன் மூலம் கொள்ளிடம் ஆற்றிலிருந்து நேரடியாக கடலில் சென்று சேரும் நீரை ஓரளவுக்கு தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். ஆற்றின் கரையோர கிராமங்களிலுள்ள நிலங்கள், உவர் நிலங்களாக மாறுவதை மாற்றி மீண்டும் பயிரிட ஏதுவாக அமையும்.இதன் மூலம் நிலத்தடி நீர் நன்னீராக மாறுவதால் குடிநீர் பற்றாக்குறை தடுக்கப்படும்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் பல கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் தண்ணீர் நல்ல தண்ணீராக கிடைத்துக் கொண்டே இருக்கும். கொள்ளிடம் கடைமடைப் பகுதியில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக மாறியுள்ளது. அந்தத் தரிசு நிலங்கள் மீண்டும் நீர்பாசனம் பெற்று பயிர் சாகுபடி செய்ய ஏதுவாக அமையும். எனவே கொள்ளிடம் ஆற்றில் கதவணை கட்டப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு விவசாயிகள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page