20th September 2021

நாகை மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க அரசுக்கு கோரிக்கை- கோமல் அன்பரசன்

நாகை மாவட்டத்தில் அமைய உள்ள மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என காவிரி அமைப்பின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், தமிழக அரசால் அமைக்கப்பட உள்ள நாகப்பட்டினம் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு நாகைக்கு அருகில் உள்ள ஒரத்தூர் என்ற ஊராட்சி பகுதியை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து அனுப்பியிருக்கிறது. ஏற்கெனவே நாகைக்கு மிக அருகிலேயே திருவாரூர் மருத்துவக்கல்லூரி அமைந்துள்ள நிலையில், மாவட்ட மருத்துவமனைக்கு நிகராக மயிலாடுதுறை மருத்துவமனை திகழ்ந்து வருகிறது. மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுக்கா பகுதிகளில் உள்ள லட்ச கணக்கான மக்கள் அவரச சிகிச்சைக்கு திருவாரூர் மருத்துவக்கல்லூரிக்கும் அல்லது தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்கும் தான் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மருத்துவ கல்லூரியியை மயிலாடுதுறையில் அமைத்தால் மயிலாடுதுறை வருவாய் கோட்டத்தில் உள்ள பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, தமிழக அரசு இந்த கோரிக்கையை மறு பரிசீலனை செய்து மருத்துவ கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என காவிரி அமைப்பின் தலைவர் கோமல்.அன்பரசன், தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரதுறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

You cannot copy content of this page