30th November 2021

காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி குடகு மலையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பாதயாத்திரைக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு

காவிரியை தூய்மைப்படுத்த வலியுறுத்தி அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் இராமானந்தா தலைமையில், 50க்கும் மேற்பட்ட துறவியர்கள், காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் இருந்து பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். கடந்த மாதம் 21ஆம் தேதி குடகு மலையிலிருந்து புறப்பட்ட பாதயாத்திரை நாகை மாவட்டம் மயிலாடுதுறையை வந்தடைந்தது. இந்த பாதயாத்திரையை வரவேற்று மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் காவிரி தாய்க்கு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. துறவியர்கள், பூசாரிகள் மற்றும் ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து காவிரி தாயை வழிப்பட்டனர். இதில் கலந்துகொண்ட அகில பாரத துறவியர்கள் சங்க செயலாளர் இராமானந்தா காவிரியில் பொதுமக்கள் சாக்கடை கழிவுநீர் மற்றும் குப்பைகளை கலக்காமல் பாதுகாக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

You cannot copy content of this page