8th December 2021

ஒரு வார ஊரடங்கில் எவை அனுமதிக்கப்பட்டுள்ளது?

கொரோனா பெருந்தொற்று பராவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்வித தளர்வுமின்றி தமிழகத்தில் நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கீழ்க்கண்டவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

  1. மருந்தகங்கள் , நாட்டு மருந்து கடைகள் , கால்நடை மருந்தகங்கள்.
  2. பால் விநியோகம் , குடிநீர் மற்றும் தினசரி பத்திரிக்கை விநியோகம்.
  3. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் , பழங்கள் , தோட்டக்கலை துறை மூலமாக சென்னை நகரத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
  4. தலைமை செயலகத்திலும் , மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்.
  5. தனியார் நிறுவனங்கள் , வங்கிகள் , காப்பீட்டு நிறுவனங்கள் , தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிவோர், வீட்டிலிருந்து பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  6. மின்னணு சேவை (E-COMMERCE) காலை 8.00 மணி முதல் மாலை 06.00 வரை இயங்கலாம்.
  7. உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும் , நண்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப் படுகிறது.
    Swiggy,Zomato போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேல்குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  8. பெட்ரோல் , டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்.
  9. ஏ.டி.எம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும்.
  10. வேளாண் விளை பொருட்கள் மற்றும் இடு பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.
  11. சரக்கு வாகனங்கள் செல்லவும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல்லவும் அனுமதிக்கப்படும்.
  12. உரிய மருத்துவக் காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடான் அனுமதிக்கப்படும்.
  13. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.
  14. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கலாம்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page