3rd December 2021

நீளம் தாண்டுதலில் தங்கம் வென்ற நாகை மாணவர்க்கு பாராட்டு

நாகை மாவட்டம் வேதாரணயத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். கராத்தே பயிற்சியாளர். இவரது மனைவி சிவமலர். இவர்களின் மகன் விக்னேஷ்(20), சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிகவியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

தடகள வீரரான விக்னேஷ், நேபாளத்தில் பகாரா என்ற இடத்தில கடந்த 20-ம் தேதி நடைபெற்ற இந்தோ – நேபாள் 6-வது கோல்டன் கோப்பைக்கான போட்டியில் கலந்து கொண்டார். இதில், நீளம் தாண்டும் போட்டியில் விக்னேஷ் 6.9 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர், தேத்தாக்குடி தெற்கு கிராமத்திக்கு நேற்று முன்தினம் வந்த விக்னேஷுக்கு கிராம மக்கள் உள்ளிட்டடோர் சால்வை அணிவித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நீளம் தாண்டும் போட்டியில் முதல் பரிசு, பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான நீளம் தாண்டும் போட்டியில் 2-வது பரிசு, கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் முதல் பரிசு உட்பட தடகளப் போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பரிசுகளை விக்னேஷ்
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You cannot copy content of this page