20th September 2021

நாகப்பட்டினம் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

நாகப்பட்டினம் மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வருகின்ற 21.10.2019 ஆம் தேதி திங்கள் கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு,நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர்கள் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு ஏஜெண்டுகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும், எரிவாயு உருளைகள் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் தொடர்ப்பன ஆலோசனைகளையும் அனைத்து எரிவாயு நுகர்வோர் அமைப்பினர் கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் நேரில் தெரிவித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், நாகப்பட்டினம் மாவட்டம்.

Leave a Reply

You cannot copy content of this page