எம்.பில். படிப்புக்கு கட்டணமில்லை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.), ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2021- 22ம் கல்வியாண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

மாணவர்கள் முதுகலைப் பட்டப்படிப்பில் பெற்ற மொத்த மதிப்பெண்களில் 50% மற்றும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 50% ஆகியவை சேர்த்துக் கணக்கிட்டுத் தெரிவுப் பட்டியல் அமைக்கப்படும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் உயரளவு மதிப்பெண் வரிசையில் தமிழ்நாடு அரசின் இனவாரி சுழற்சி அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

தேர்வு செய்யப்படும் மாணவர்கள் உரிய கல்வித் தகுதிக்கான மூலச் சான்றுகளையும் அவற்றின் ஜெராக்ஸ் நகல்கள் (இரண்டு வீதம்) எடுத்துவரவேண்டும். அசல் சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

விண்ணப்பங்களை நிறுவன வலைதளத்தில் (www.ulakaththamizh.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அஞ்சல் வழியிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள்- 16.08.2021.

நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகியன தகுதியுடைய விண்ணப்பதாரர்களுக்குப் பின்னர் தெரிவிக்கப்படும். கல்விக் கட்டணம் – கிடையாது. மாணவ, மாணவியர்க்குத் தனித்தனியே கட்டணம் இல்லாத தங்கும் விடுதி வசதி உள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை – 113, போன்: 044-2254 2992.சேர்க்கை தொடர்பான விதிமுறைகள், தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

More News

சார் பதிவாளர்கள் இனி உயர்ந்த மேடையில் அமரக்கூடாது – வணிகவரித்துறை!

admin See author's posts

அகத்திய முனி வரலாறு மற்றும் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்!

admin See author's posts

நடிகர் சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் மதிய உணவு வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறையில் ரிங் ரோடு பணி விரைவில் துவங்கும்!

admin See author's posts

மயிலாடுதுறையில் குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசி வழங்கும் விழா!

admin See author's posts

தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அறிவிப்பு!

admin See author's posts

12ம் வகுப்பில் கூடுதல் மதிப்பெண் பெற விருப்பத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியது..!!

admin See author's posts

பயனாளர்களின் தகவல்களை பகிர மாட்டோம்.. இறங்கிவந்த வாட்ஸ்அப் நிறுவனம் !!

admin See author's posts

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள்!

admin See author's posts

விவசாயிகளுக்கு உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

You cannot copy content of this page