19th January 2022

மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம்… தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பைக் கட்டுப்படுத்த ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடரிலிருந்து மக்களை காக்க தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருக்கும் தமிழக அரசு, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் மாஸ்க், சானிடைசர், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. இத்தகைய இக்கட்டான சூழலை பயன்படுத்தி கொண்டு மாஸ்க், சானிடைசர் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பன்மடங்கு அதிகமாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஸ்க், சானிடைசர் உள்ளிட்ட 15 அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட சர்ஜிக்கல் மாஸ்க் அதிகபட்சமாக ரூபாய் 4.50க்கு மட்டுமே விற்க வேண்டும் என்றும் n-95 மாஸ்க் 22 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல, சானிடைசர் 200 மில்லி 110 ரூபாய்க்கும் பிபிஇ கிட் உடை 273 ரூபாய்க்கும் விற்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் மாஸ்க் 54 ரூபாய்க்கும் பல்ஸ் மீட்டர் 1,500 ரூபாய்க்கும் விற்க வேண்டும் எனவும் விலையை நிர்ணயித்துள்ளது.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page