8th December 2021

மயிலாடுதுறையில் தடையை மீறி ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையைமீறி ஆடிப்பெருக்குவிழா கொண்டாட்டம். காவிரி அன்னைக்கு படையலிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2வது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. திருவிழாக்கள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆடி பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால், கடந்த 1ம் தேதி முதல் 9ம்தேதி வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மாவட்ட ஆட்சியர் லலிதா தடைஉத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மேலும், காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களிலும் பக்தர்களுக்கு வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையைமீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடினர். அதிகாலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி மற்றும் பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Source:https://m.dailyhunt.in/news/india/tamil/dinamalar-epaper-dinamalar/mayiladuthuraiyil+tadaiyai+meeri+aadipperukku+kondattam-newsid-n303985786

 

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page