மயிலாடுதுறையில் 2000 ரூபாய் நோட்டு வடிவில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு

மயிலாடுதுறையில் 2000 ரூபாய் நோட்டு வடிவில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களிடம் பாராட்டுதல்களை பெற்ற தன்னார்வ இளைஞர்கள்.

தேர்தலில் வாக்களிக்க பணம் வழங்கும் கலாச்சாரம் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. ஓட்டுக்கு பணம் தராவிட்டாலோ, அல்லது குறைவாக கொடுத்துவிட்டாலோ கோபப்படும் அளவுக்கு வாக்காளர்களின் மனநிலை மாறியுள்ளது. மேலும், யார் பணம் கொடுத்தாலும் பெற்றுக்கொண்டு தான் விரும்பும் வேட்பாளருக்குத்தான் வாக்கு அளிப்பது என்கிற புதிய சித்தாந்த சிந்தனையும் பலரிடம் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில், மயிலாடுதுறையில் தன்னார்வ இளைஞர்கள் சிலரின் முயற்சியில் ஓட்டுக்கு பணம் வாங்கமாட்டோம் என்ற விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ‘எங்களது வாக்குகள் விற்பனைக்கு அல்ல” என்ற வாசகங்கள் பதித்த 2000 ரூபாய் வடிவில் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், இவர்கள் தங்கள் முயற்சியை குறும்படமாகவும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். அந்த குறும்படம் பொதுமக்களிடம் தற்போது வைரலாக பரவி வருகிறது.

வேட்பாளர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குச் செலுத்த வாக்குச் சாவடிக்கே செல்லாதவர்களுக்கு மத்தியில், யார் எப்படி போனால் எனக்கென்ன என்றிருந்துவிடாமல் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறும்படத்தை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ள இந்த இளைஞர்களின் முயற்சி பலரது பாராட்டுதல்களை பெற்றுள்ளது.

More News

11 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் தமிழ்நாடு அரசு உத்தரவு

admin See author's posts

சிறுவனின் சிறுநீரக சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கிய அன்பு அறக்கட்டளை.

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

admin See author's posts

மயிலாடுதுறையில் உலகயோகா தினம்

admin See author's posts

மயிலாடுதுறை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க இணையவழி கலந்தாய்வு கூட்டம்

admin See author's posts

அரசு மருத்துவமனைக்கு “குரு-94 “அமைப்பு சார்பில் ஆக்சிஜன் கருவிகள்

admin See author's posts

செம்பனார்கோயில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

admin See author's posts

செம்பனார்கோவிலில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 1000 பேர் பங்கேற்று பயனடைந்தனர்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசணை கூட்டம்

admin See author's posts

தமிழ்நாட்டில் தொற்றின் பாதிப்பை பொறுத்து மாவட்டங்களை 3 வகையாக பிரித்து தளர்வுகள் அறிவிப்பு..!! முழு விவரம்..!!

admin See author's posts

You cannot copy content of this page