மயிலாடுதுறை 23வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரனுக்கு அனைத்து சமூகமும் ஆதரவு!



மயிலாடுதுறை நகரசபையில் 36 வார்டுகளுக்கு தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற பாடுபட்டு வருகிறார்கள்.
மயிலாடுதுறை 23வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பேராசிரியர் இரா.முரளிதரன் ஆளும் திமுகவையும் எதிர்கட்சியான அதிமுகவையும் பின்னுக்குத்தள்ளி வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளார்.
இதற்கு காரணம் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு மக்களிடமும் நன்மதிப்பை பெற்றவர். தொடர்ந்து இந்தப் பகுதியில் 40 ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணிகள் தான் இன்று அவருக்கு ஆதரவாக மக்கள் மன்றத்தில் எதிரோலிக்கிறது.
1998 இல் மயிலாடுதுறையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கட்டண கொள்கையில் ஈடுப்பட்ட போது அதனை தடுத்து போராட்டம் நடத்தி அதற்காக சிறையும் சென்றார்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சீர்கேடுகளை கண்டித்து தீ காயம் பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை மையத்தை ஏற்படுத்த கோரியும் சுமார் 1000 பெண்களுடன் சாலை மறியல் செய்து அதில் வெற்றியும் கண்டார்.
பாதாள சாக்கடைத் திட்டம் நடைபெறும் வேளையில் அதில் உள்ள குறைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். இதன் காரணமாக வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கிறார் முரளிதரன் என்று இவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி ஒரு மாத காலத்திற்கு மயிலாடுதுறை எல்லையில் நுழையக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
ஆனால் தற்போது அதே பாழாப்போன பாதாள சாக்கடை பல உயிர்களை வாங்கியதால் முரளிதரன் சொன்னது உண்மை என தற்பொழுது உள்ள அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
மயிலாடுதுறை நகராட்சியில் ஊழல் பெருச்சாளியான நகராட்சி ஆணையர் சோம.சுவாமிநாதன் அவர்களின் ஊழலை அம்பலப்படுத்தி அவரை பதவி நீக்கம் செய்தார்.
காவல் நிலையங்களில் நடைபெறும் முறைக்கேடுகளை தட்டிக்கேட்பது காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து போன அம்பேத்கார், செம்பை செந்தில் ஆகியோரின் இழப்புக்கு நீதி கேட்டு காவல்துறைக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
மயிலாடுதுறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் கட்டபஞ்சாயத்துகளை ஒழிக்க நேர்மையான டிஎஸ்பி மூர்த்தி அவர்களை இங்கு பணியமர்த்த கோரி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டவர்.
கொசுவை ஒழிக்க சொல்லி போராட்டம் நடத்திய முரளிதரனை அன்றைய ஆட்சியாளர்கள் உருட்டு கட்டையால் நடுரோட்டில் தாக்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய தினம் மயிலாடுதுறையில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையம் முரளிதரன் அவர்களின் பல்வேறு கட்ட 10 ஆண்டுகளாக நடத்திய போராட்டத்தின் விளைவு தான் இந்த புதிய பேருந்து நிலையம் என மக்களால் பரவலாக பேசப்படுகிறது.
காவல்துறையினரால் மயிலாடுதுறை பகுதியில் தொடர்ந்து தாக்கப்படும் தேவர் இன மக்களுக்கு ஆதரவாக முக்குலத்தோர், இயக்கத்துடன் போராடி சுமார் 15 நாட்களுக்கு மேல் சிறை சென்றவர்.
மயிலாடுதுறை எரிவாய்வு சுடுகாட்டில் பராமரிப்பு வேலை செய்த ராசாவை பதவி நீக்கம் செய்ததை கண்டித்தும் ரூபாய் இரண்டாயிரம் ஆக இருந்த பிளாம் எரியூட்டும் கட்டணத்தை 5000 ஆக உயர்த்தியதை கண்டித்தும் தொடர் ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
மேலும் பட்டா இல்லாத மக்களுக்கு அதனை வழங்க கோரியும் வீட்டுமனை இல்லாத மக்களுக்கு வீட்டுமனை வழங்க கோரியும் மயிலாடுதுறை பகுதியில் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தியவர்.
இப்படியாகத் தொடர்ந்து 25 வருடங்களாக மக்களுக்காக பலவித போராட்டங்களை நடத்திய இவர் மீது 25 பிரிவுகளில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
போராட்டக்காரர் பத்திரிக்கை நிருபர் பேராசிரியர் பள்ளியின் முதல்வர் என பன்முக தன்மைகண்ட முரளிதரன் மக்களோடு மக்களாக வாழ்ந்து தற்பொழுது தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் அவருக்கு பொதுமக்களின் பேராதரவுடன் வெற்றி பெறும் வாய்ப்பு நிறைய உள்ளதாக அப்பகுதி மக்களின் மத்தியில் பேசப்படுகிறது.