26th October 2021

மயிலாடுதுறை: சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்கள் பறிமுதல்!

சீர்காழி அருகே காரில் கடத்திய 300 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.</p>

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவிடைக்கழி என்ற இடத்தில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திருவிடைக்கழியில் இருந்து கொளக்குடி நோக்கி வந்த காரை மறித்து போலீசார் சோதனை செய்தனர்.இதில் காரில் 300 புதுச்சேரி மதுபாட்டில்கள் இருந்தது.இதை தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தங்குடி கிராமம் பாண்டவரும் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் சுந்தர்ராஜன் (வயது30), அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் வெங்கடேசன் (31), அன்பழகன் மகன் கண்ணதாசன் (21), பெரியான் மகன் மகேந்திரன் (31), மயிலாடுதுறை மாவட்டம் நெடுவாசல் கிராமம் காலனி தெருவை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், இவர்கள் 5 பேரும் காரைக்கால் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page