19th January 2022

மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்ச ரூபாய் மோசடியில் ஒன்றிய ஆணையர் பொறியாளர்கள் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம்!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் 28ம் தேதி ஊராட்சி ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ் நடைபெற்ற பல்வேறு பணிகளில் மோசடிகள் நடைபெற்று இருப்பதாகவும் சாலை உள்ளிட்ட பல நலத்திட்ட பணிகள் செய்யாமலே கணக்கு காட்டபட்டுளதாகவும் ஒரே பணியை இரண்டு பெயரில் பில் போட்டு மோசடி செய்ததாகவும் இதனால் ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையடுத்து சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணகுமார் மற்றும் திருவாரூர் மகளிர் சட்ட இயக்குனர் லேக்கா ஆகியோர் மேல் விசாரணை மேற்கொண்டு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில் 25,82,606 ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஊரக வளர்ச்சி துறை முறைகேடு குறித்து 9 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும் விசாரணையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட மாதங்களில் பணியில் இருந்த ஊராட்சி ஒன்றிய சரவணன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் கிருஷ்ணகுமார், தெய்வானை பூர்ணசந்திரன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் அன்பழகன், அகிலா ராஜகுமார் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பணியிடை நீக்கம் செய்து உத்தவர்விட்டர்.

Advertisement

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page