8th December 2021

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கடலில் இறந்து மிதந்த திமிங்கல சுறா!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே இன்று 5.5 மீட்டர் நீளமும், 2.40 மீட்டர் அகலமும், 1.5 டன் எடையுடன் கூடிய மூன்று வயது திமிங்கிலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் புதுப்பட்டினம் பகுதி வன காவலர் செல்லையா தலைமையில் வனத்துறை ஊழியர்கள், கடலோர காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கரை ஒதுங்கி இருந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு, திமிங்கிலம் படகில் அடிபட்டு இறந்ததா? அல்லது மீனவர்கள் வலையில் சிக்கி இறந்துள்ளதா? அல்லது பிளாஸ்டிக் நெகிழி உள்ளிட்ட பொருட்களை விழுங்கியுள்ளாதா? என இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இறந்த திமிங்கல சுறாவை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதில், கடல்வாழ் உயிரினங்கள் பட்டியலில் மிகவும் அரிய வகை திமிங்கல சுறா வகையை சார்ந்தது என தெரியவந்தது. அதனை தொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் மூலம் திமிங்கல சுறா பிரேத பரிசோதனைக்கு பின்னர் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காட்டில் புதைக்கப்பட்டது.

Advertisement

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page