3rd December 2021

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்த நவீன விவசாயி!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பாலமுருகன். இயற்கை ஆர்வலரான இவர் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நஞ்சில்லா பாரம்பரிய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கருப்புக்கவுனி போன்ற ரகங்களை விளைவிக்க விரும்பினார்.

பொதுவாக, வயலில் நாற்றங்கால் வளர்க்க வயலில் தண்ணீர் பாய்ச்சி, உழவடித்து, நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்தி அமைத்து நாற்றங்கால் வளர்ப்பதைப் போல் இல்லாமல் தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளார்.

முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கருக்கான ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஒன்றரை ஏக்கருக்கான தூயமல்லி நாற்றங்கால்களை மாடியிலேயே உருவாக்கியுள்ளார். சேறில்லா விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இயந்திர நடவுக்கான நாற்றுக்களை சேறுக்கு பதிலாக கருக்காய், தேங்காய் நார் கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு ட்ரேயில் நெல் விதைகள் பரப்பி நாற்றுக்களை உருவாக்கியுள்ளார். நாற்றுகளுக்கு தேவையான நீரை பூவாளி வைத்து பாய்ச்சுகிறார். இதனால் நாற்றுக்கள் 17 நாள்களில் நாற்றின் வேர் பகுதி சேதமாகாமல், சேறும் சகதியும் இல்லாமல் அப்படியே எடுத்து சுருட்டி நடவுக்கு அனுப்புகிறார்.

இதனால், வயலில் நட்டால் நாற்றுக்கள் மழையில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் இவருக்கு இல்லை. மேலும், வயலில் நாற்றங்கால் விடுவதைவிட குறைந்த செலவே ஆகிறது. இதற்கான கலப்பில்லா, முளைப்புத்திறன் அதிகமுள்ள நெல் ரகங்களை வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம் ஐ.சி.ஐ.சி.ஐ. பவுன்டேஷனுடன் இணைந்து வழங்கிவருகிறது. பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் முனைப்புடன் நெல்லை வழங்கி வரும் இவர்கள் அதனை விலைக்கு தருவதற்கு பதிலாக, தரும் விதை நெல்லைவிட இரண்டு மடங்காக திரும்பப் பெற்று பாரம்பரிய ரகங்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். ஐ.சி.ஐ.சி.ஐ. பவுன்டேஷன் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 டன் விதை நெல்லை வழங்கியுள்ள நிலையில், விவசாயி பாலமுருகன் மட்டுமே அதனை மாடியில் வளர்த்து பலனும் கண்டுள்ளார். இவரது செயல்பாடுகளை வேளாண் ஆர்வலர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

More News

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார் – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

You cannot copy content of this page