25th September 2021

மயிலாடுதுறை: நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி வழங்கப்படாததால் மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல்!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஒன்றியம், செருதியூர் ஊராட்சியில் முளைப்பாக்கம் கிராமம் ஐயன்னார் கோவிலில் கடந்த 7 ஆண்டுகளாக திறந்த வெளி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு நிரந்தர கட்டிடம் இல்லாததால் கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

இதனால் விவசாயிகள் இணைந்து 3லட்சம் ரூபாயில் மேற்கூரை அமைத்து ஒரு மாத காலத்திற்கு மேலாக காத்து கொண்டு வருகின்றனர். உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் கொள்முதல் நிலையம் திறக்க படாததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம், மூங்கில் தோட்டம் கடைவீதியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க முழக்கமிட்டனர். இதனால் ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று பள்ளி கல்லூரிகள் திறக்கபட்டதால் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றனர். அவசர சேவை ஆம்புலன்ஸ் மட்டும் வழிவிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page