30th November 2021

மயிலாடுதுறை: பொறையாறில் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த தொழிலாளி!

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு மரகதம் காலனியைச் சேர்ந்தவர் பாலு. (வயது 65) விவசாய கூலித் தொழிலாளியான இவர் புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி பொறையாறு கிளை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும், 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 4-வது மகன் காளிமுத்து (21) என்பவர் சென்னையில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். காளிமுத்து கடந்த 16-ந்தேதி பொறையாறு வந்துள்ளார். பாலு தினமும் மது அருந்திவிட்டு வந்து தெரு மக்களிடமும், குடும்பத்தினரிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவும் பாலு மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் பாலு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல்அறிந்த பொறையாறு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பான கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பாலுவின் மகன் காளிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page