19th January 2022

மயிலாடுதுறை: செயற்பொறியாளரை கைது செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

மின்வாரிய பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த செயற்பொறியாளரை கைது செய்யக்கோரி மயிலாடுதுறையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் விதவை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் பிரேமா, விசாலாட்சி, ராணி, செல்வபாக்யவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட செயலாளர் வெண்ணிலா, மாவட்ட பொருளாளர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் விதவை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முன்னதாக மாதர் சங்கத்தினர் காமராஜர் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கச்சேரி சாலையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சண்முகவள்ளி, கண்ணகி, தமிழ்குடிமகள், சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வனரோஜா நன்றி கூறினார்.

இது தொடர்பாக மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் முத்துக்குமரன் நிருபர்களிடம் கூறும்போது, நீடூர் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்கள் செலுத்தும் தொகையில் கையாடல் செய்தது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பான விசாரணை முடிந்து இறுதி நடவடிக்கை எடுக்கப்படும் நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் என்மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். இது வேண்டும் என்றே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆகும். இந்த புகார் உண்மைக்கு மாறானதாகும் என்றார்.

More News

மயிலாடுதுறை:திருவிழந்துர் மகா காளியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு வழிபாடு!!

admin See author's posts

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி செய்க: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் தமிழக ஆளுநருக்கு ராஜகுமார் எம்.எல்.ஏ. மனு!

admin See author's posts

மயிலாடுதுறை :நண்பரின் வீட்டில் தீ வைத்தவர் கைது !!

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் விழா – நிவேதா எம்.முருகன்!

admin See author's posts

கோமல் ஊராட்சி 100 நாள் வேலை திட்டத்தில் தூய்மையாகும் பாசன வாய்க்கால்

admin See author's posts

மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை எழுந்தருளும் நிகழ்ச்சி பெருமாள், தாயார், ஆண்டாள் ஏக சிம்மாசனத்தில் அருள்பாலிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே ஜப்பானிய முறையில் குறுங்காடு வளர்க்கும் என்ஜினீயரிங் பட்டதாரி!

admin See author's posts

மயிலாடுதுறையில் 5 ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்!

admin See author's posts

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்று பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சொந்த செலவில் சரிசெய்த கொள்ளிடம் போலீசார்!

admin See author's posts

You cannot copy content of this page