26th October 2021

மயிலாடுதுறை: தில்லையாடி வள்ளியம்மை மணிமண்டபம் சீரமைக்கப்படும் என ஆட்சியர் இரா.லலிதா தகவல்!

தென் ஆப்பிரிக்க விடுதலைப் போரில் மிக முக்கிய பங்காற்றியவர் தில்லையாடி வள்ளியம்மை. சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் சுதந்திர வேட்கையை ஊட்டியவர் என்று மகாத்மா காந்தி பெருமிதத்துடன் கூறினார். பெருமை படைத்த தில்லையாடி வள்ளியம்மையின் ஊரை பார்ப்பதற்காக தமிழகம் வந்திருந்த மகாத்மா காந்தியடிகள் 1915 -ஆம் ஆண்டு அவர் தில்லையாடியில் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு நினைவு ஸ்தூபி கட்டப்பட்டுள்ளது.

அதற்கு அருகே தில்லையாடி வள்ளியம்மைக்கு மணிமண்டபம் மார்பளவு சிலை மகாத்மா காந்தி எழுதிய கடிதங்கள் ஆகியவைகள் இடம் பெற்றுள்ளது. இந்த கட்டிடம் தற்போது பழமை காரணமாக சீரமைக்க வேண்டிய நிலைமையில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஞாயிற்றுக்கிழமை தில்லையாடி வள்ளியம்மை மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக வள்ளியம்மையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கூறுகையில் விரைவில் புதுப்பொலிவுடன் தில்லையாடி வள்ளியம்மையின் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது செம்பனார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா, தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன், தில்லையாடி ஊராட்சி மன்றத்தலைவர் ரங்கராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி கார்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page