மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்தைத் தள்ளிவைக்கக் கோரிக்கை!

கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகத்தைத் தள்ளிவைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீன நிர்வாகத்திலுள்ள ஸ்ரீ தையல்நாயகி சமேத ஸ்ரீ வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் ஸ்ரீ செல்வமுத்துக்குமாரசுவாமி, நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய் பகவான், சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்தரி சித்தர் ஆகியோர் தனித்தனி சந்நதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்து உருண்டையை உட்கொண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது அருள்வாக்கு. இத்தகைய சிறப்புமிக்க கோயிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வரும் 24 -ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 29-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்காக 144 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. யாகசாலை பூஜைக்காக 600 குருக்கள் 400 உதவியாளர்கள் என ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்புப் பேரவை மாநிலத் தலைவர் ரவி இந்து சமய அறநிலையத்துறை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், சுகாதாரத்துறை மற்றும் தருமபுர ஆதீன குருமகா சந்நிதானத்திற்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் கட்டளைதாரர்கள், பக்தர்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கும்பாபிஷேகத்தைக் கண்டு தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக வைத்தீஸ்வரன் கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்படுகின்றன. கொரோனா தடுப்புச்சட்டம் மற்றும் விதிகளைக் கடைபிடிக்காமல், ஆணையரின் அனுமதி பெறாமலும் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. எனவே கொரோனா நோய்தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை கும்பாபிஷேகத்தைத் தள்ளிவைத்து மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Source:

https://m.dailyhunt.in/news/india/tamil/vikatan-epaper-vika/mayiladuthurai+vaitheesvaran+koyil+kumbabishekathaith+tallivaikkak+korikkai-newsid-n272422278

More News

தமிழக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா உறுதி

admin See author's posts

திமுக அமைச்சரவை பட்டியல் வெளியாகி உள்ளது.

admin See author's posts

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

You cannot copy content of this page