25th January 2022

மயிலாடுதுறை: கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்!

கொரோனா நடவடிக்கை காரணமாக முன்பதிவில்லாத ரயில்களை ரயில்வே துறை நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக மயிலாடுதுறையில் இருந்து வேலை நிமித்தமாக தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மண்டலத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் 22 பாசஞ்சர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மீண்டும் இயக்க உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து பதிலளிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு மதுரை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே நிலையம் முன்பு கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து முன்பதிவு இல்லாத தொடர் வண்டிகளை இயக்க வலியுறுத்தி ரயில்வே தொடர் வண்டி பயணிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பயணிகள் சங்க தலைவர் மெயில் சங்கர் தலைமையில் நடைபெற்றது.

முதலில் செயலாளர் தமிழன் கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் முரளிதரன், ரிட்டயர்டு துணை கலெக்டர் மகாலிங்கம், வழக்கறிஞர் சிவச்சந்திரன் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஜெயின் சங்கத்தினர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் ஏராளமான பொதுமக்களுடன் கலந்து கொண்டு தொடர்வண்டியை இயக்க வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.ஆர்ப்பாட்ட முடிவில் பயணிகள் சங்க கௌரவத் தலைவர் சின்ன கலைஞர் நன்றியுரையாற்றினார்.

Advertisement

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page