குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுகளுக்கு இணையவழி இலவச பயிற்சி இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் (டி.என்.பி.எஸ்.சி.) 5,529 பதவியிடங்களுக்கான குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். இதற்கான முதல் நிலை தேர்வு வருகிற மே மாதம் 21-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக குரூப்-2, குரூப்-2 ஏ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் இணையவழியாக தொடங்கி நடத்தப்பட உள்ளது. இதில் பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் கலந்து கொள்ள தங்களுடைய பெயர், செல்போன் எண், முகவரி, கல்வித்தகுதி போன்ற சுயவிவரங்களை மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 6383489199 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமாகவோ, studycircledeomayil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமாகவோ அளித்து, பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04364 299790 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page