மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் காத்திருப்பு போராட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் சீனி.மணி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாலையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரம் ஊராட்சி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஊராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்யக்கூடாது.

ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊராட்சியில் தீர்மானம் வைத்து பணிப்பதிவேடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிவேல், மின்ஊழியர் மத்திய அமைப்பு சங்க மாவட்ட செயலாளர் கலைச்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சின்னக்கடை வீதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் மாலை வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

More News

மயிலாடுதுறையில் வண்ணான் குளத்தை சுற்றி நடைபயிற்சி மேடை, பூங்கா அமைக்கும் பணி!

admin See author's posts

`கூடிய விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என பெயர் மாற்றுவார்கள்’- ஜெயக்குமார் காட்டம்

admin See author's posts

ஜெர்மனி சென்றடைந்தார் பிரதமர் மோடி: சிவப்பு கம்பள வரவேற்பு!

admin See author's posts

பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சி தொடங்க திட்டம்?.. மக்களிடம் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என ட்வீட்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் ஏ.ஐ.டி.யூ.சி.- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மே தின ஊர்வலம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது!

admin See author's posts

விவசாயிகள் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து 15 நாளில் தீர்வு காண வேண்டும்-மயிலாடுதுறை குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்!

admin See author's posts

எலட்ரிக் ஸ்கூட்டரில் தீ விபத்து: உயிர் தப்பிய தந்தை, மகன்!

admin See author's posts

நாகை அருகே தேர் சக்கரத்தில் சிக்கி பலியான இளைஞருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

admin See author's posts

மே 1ல் மக்களாட்சி மணம் வீசட்டும் – முதலமைச்சர் வாழ்த்து

admin See author's posts

You cannot copy content of this page