26th October 2021

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடியில் 40 விதவை பெண்களுக்கு ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் விதவைகளுக்கு ஹோப் எவர் பவுண்டேஷன் சாரிடபுள் டிரஸ் நிறுவனம் மூலம் ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி தூய ஜான் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.பாத்திமா சாரிடபுள் சொசைட்டி, ஹோப் எவர் பவுண்டேசன் சாரிடபுள் அறக்கட்டளையுடன் இணைந்து மத்திய அரசின் ஆடு வளர்ப்பு திட்டத்தில் 40 விதவைகளுக்கு தலா இரண்டு ஆடுகளும், வளர்ப்புக்கான செலவின தொகையாக தலா ஆயிரமும் வழங்கும் நிகழ்ச்சியில் ஹோப் எவர் பவுண்டேசன் அறக்கட்டளையின் இயக்குநர் ரோசலின் கயல்விழி தலைமை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு அருட் சகோதரி. மரியா முன்னிலை வகித்தார்.புனித தெரசா கன்னியர் இல்ல தலைவி செபஸ்டினா பிரான்சிஸ் மற்றும் அருட்சகோதரிகள் நோயல் ஜெனட், ரொமேனா, ஆர்.சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியையும், களப்பணியாளருமான வெரோணிக்கா, சமூக நலப்பணி ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி தார்சில் மேரி மற்றும் ஆசிரியர்கள், பயனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஆடுகளை வழங்கினர்.

இத்திட்டத்தால் தரங்கம்பாடி, காழியப்பநல்லூர், துடரிப்பேட்டை, சிங்கானோடை, அனந்தமங்கலம், காட்டுச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விதவை பெண்கள் பயனடைந்தனர். முன்னதாக சமூகத்தில் விதவை பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதை எப்படி எதிர்கொள்வது, வாழ்வாதாரத்தை உருவாக்கி அதை எப்படி பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உரை நிகழ்த்தினர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page