26th October 2021

மயிலாடுதுறை மாவட்ட மாணவிகளுக்கு போலீஸ் எஸ். பி. சுகுணா சிங் அறிவுரை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் தொந்தரவு குற்றங்கள் அதிகரித்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு தற்போது வரை 60க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்தும், அதில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மயிலாடுதுறை தனியார் பள்ளியில் மாணவிகளுக்கானவிழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாணவிகள் ஆண்களுடன் எவ்வாறு பழக வேண்டும், தொட்டு பேசுதல் கூடாது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், அறிமுக இல்லாத நபர்களுடன் சமூக வலைதளங்களில் நட்பை தொடரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கருத்துரைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், டி.எஸ்.பி. வசந்தராஜ், மகளிர் காவல் ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் மாணவிகளுக்கு அறிவுரையாக வழங்கினர். மேலும் 1098181 என்ற நம்பரை தொடர்பு கொண்டு காவல்துறையின் உதவியை பெற அறிவுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

More News

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

மயிலாடுதுறை: பள்ளிகள் திறப்பை முன்னிட்டு வாகனங்கள் ஆய்வு-மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா!

admin See author's posts

You cannot copy content of this page