22nd January 2022

மயிலாடுதுறை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட்டார்!

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் தனபால் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36-வார்டுகள், சீர்காழி நகராட்சியில் உள்ள 24-வார்டுகள், தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18-வார்டுகள், குத்தாலம் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள், மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள் ஆக மொத்தம் 123-வார்டுகளுக்கு, சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவுற்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் 2 நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. பிரமுகர் தீக்குளிக்க முயற்சி!!

admin See author's posts

சிமெண்டு சாலை அமைக்கும் பணி!!

admin See author's posts

தேசிய போர் நினைவுச் சின்னத்துடன் இணையும் அமர் ஜவான் ஜோதி!: ராணுவ வீரர்கள் மரியாதை

admin See author's posts

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் நுழைந்த ‘ஜெய் பீம்’

admin See author's posts

ஒமிக்ரான் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: ஒன்றிய அரசு அறிவிப்பு!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வழங்க ரூ.47.38 லட்சம் நிதி ஒதுக்கீடு – கலெக்டர் லலிதா!

admin See author's posts

மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!

admin See author's posts

அதிக அளவில் மரங்களில் கூடு கட்டி தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்!!

admin See author's posts

அரிசி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!!

admin See author's posts

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு!

admin See author's posts

You cannot copy content of this page