25th January 2022

மயிலாடுதுறை தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு!

மயிலாடுதுறையில் மாவட்ட தி.மு.க. செயல்வீர்ர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் உறுப்பினர் சேர்க்கை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பற்றியும் விரிவாக கூறி சிறப்புரையாற்றினார். இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று கட்சி நிர்வாகிகளிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

ஒரு முதலமைச்சர் எவ்வளவு உழைக்க முடியுமோ அதைவிட அதிகமாக தமிழக முதல்வர் உழைப்பதாக, முதல்வரின் கடின உழைப்பை உயர்நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவின்மூலம் அனைவரின் பாராட்டுதல்களையும் தமிழக முதல்வர் பெற்றுள்ளார்.

முதல்வருக்கு பெருமை சேர்க்கும் வகையில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கவனமாக கையாண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றி 100 சதவீத வெற்றியை நாம் பெற அயராது உழைக்க வேண்டும். கூட்டணி கட்சியினரின் மனம் நோகாமல் அவர்களை அரவணைத்து செல்ல முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்து வெற்றி பெற்றதைப் போன்றே, உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களுக்கான பட்டியலும் முதல்வரிடம் உள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை முறையாக அமைக்கப்படாததே காரணம். இதற்கு 150 கோடி ரூபாயில் புதிய பாதாள சாக்கடைத் திட்டம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் பெற்றுத்தரப்படும். மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் பகுதியில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்காக பத்திரப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டும் பணியை தமிழக முதல்வர் தொடங்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார். இக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சே.ராமலிங்கம் ,சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் , மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள் ,மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page