3rd December 2021

மயிலாடுதுறையை பூர்விகமாகக்கொண்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் திறனாளர்களின் சந்திப்பு!

ஜூன் 7 2020 அன்று, கிராஸ் (GRASS – Grassroot Research Allegiance for Self-Sufficiency) மற்றும் ஜேசிஐ மாயவரம் (JCI – Junior Chamber International Mayavaram) ஆகியோர் இந்த கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் எடுத்த முயற்சியில் மயிலாடுதுறையை சேர்ந்த பல்வேறு தொழிலை சேர்ந்தவர்கள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில், மயிலாடுதுறையை தங்களின் வேராக கொண்டு பல்வேறு நாட்டினை சேர்ந்த சுமார் 25 பேர் தங்களுடைய சொந்த ஊரின் முன்னேற்றத்தைப் பற்றி கலந்தாலோசித்தனர். இதில் சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பெரு போன்ற நாட்டில் உள்ளவர்கள் கலந்துகொண்டனர். இதில் விளையாட்டு, ஊடகம், இசை, தகவல் தொழில்நுட்பம், வணிகம், ஆராய்ச்சி, கட்டுமானம், எரிபொருள் மற்றும் வாகன தொழிற்சாலை ஆகிய துறைகளில் உள்ளவர்கள் அடங்குவர். இதில் பெரும்பான்மையானோர் நடுத்தர வயதினை சேர்ந்தவர்கள். இவர்களில் அன்றாட வேலை செய்பவர்கள் மட்டும் இல்லாமல், இதில் வணிக உரிமையாளர்களும், சுயதொழில் செய்பவர்களும், தொழில் முனைவோரும் உள்ளனர். இதில் Mercedes Benz and E&Y போன்ற சர்வதேச நிறுவனங்களில் உள்ளவர்களும் கலந்துகொண்டனர்.

கொரோனாவில் உலகத்தின் எதிர்கால நிலையும், தனிப்பட்ட அனுபவமும்:

கொரோனாவில் உலகத்தின் எதிர்கால நிலையும், தனிப்பட்ட அனுபவமும் என்கிற தலைப்பில் கலந்துரையாடல் தொடங்கியது. முதலில், திரு. அருண்குமார் பாலு அவர்கள் “தற்போதைய நெருக்கடியால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் 7 அம்சங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் அவர் தான் இருக்கும் பெரு நாட்டில், தற்போதைய நெருக்கடியில் மக்கள் எப்படி தங்களுடைய அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுகின்றனர் என்பதை பற்றி பேசினார். மற்ற நாட்டில் உள்ளவர்களும் தாங்கள் இருக்கும் நாட்டின் நிலை பற்றி பேசினர்.

பாட்மிண்டன் பயிற்சியாளராக இருக்கும் ஹாஜி முஹம்மத் அவர்கள், தன்னுடைய துறையில் உள்ள எதிர்மறையான தாக்கங்களை பற்றி விளக்கினார். மாணவர்களுக்கு ஆன்லைனில் பயிற்சி அளித்தாலும் பெரிய பயனில்லை என்பதை கூறினார். இவர் இப்போது ‘Sports DNA‘ எனும் தமிழ் விளையாட்டுத்துறைக்கு ஒரு YouTube சேனல் தொடங்கியிருக்கிறார்.

I3 Buliding and Construction-ன் உரிமையாளரும் பொறியாளருமான ரபேல் ஜான் ராஜ் அவர்கள் பெரிய அளவில் உள்ள கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்றும் சிறிய அளவில் உள்ள கட்டுமான பணிகள் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும் கூறினார். இப்பொழுது கட்டுமான பொருட்களின் விலை குறைந்திருக்கிறது என்றும் கூறினார். Finance-Tech company-யின் உரிமையாளர் திரு. மைனா ராஜா அவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை பற்றி எடுத்துக்கூறினார். மேலும் இவர் வாகனம் மற்றும் எரிபொருள் துறையில் எதிர்மறையான மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது எனவும் கூறினார்.

நகர்ப்புறம் மற்றும் ஊரக Digital 4.0

இந்த அமர்வின் மதிப்பீட்டாளரான திரு. சதிஷ் குமார் அசோக் அவர்கள் லண்டனில் உள்ள கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் முன்னணி நிர்வாகியாக பணிபுரிகிறார். அவர் இந்த கலந்தாலோசிப்பை பற்றிய நோக்கமும் சர்வதேச அறிவும், அதை தங்களின் சொந்த ஊருக்கு எப்படி பயன்படுத்துவது என்பதனை தெளிவாக விளக்கினார்.

இதில் DJ Branding மற்றும் Jingleman ஆகிய நிறுவனங்களின் நிர்வாகிகள் சார்லி பிரவின் குமார் மற்றும் சாம் ஜோசப் அவர்கள், மயிலாடுதுறையில் உள்ள வணிக அமைப்பானது உலகளாவிய வணிக அமைப்புகளுடன் கைகோர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில். E&Y-ல் மூத்த நிபுணராக பணிபுரியும் கார்த்திக் அவர்கள், நாம் அனைவரும் நம்மை Linkedin Group மூலமாக நம் வணிகத்தையும் வேலையையும் ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். Grass Foundation -ன் நிறுவனர் ராஜராஜன் அவர்கள் தற்பொழுது உள்ள கல்வி நிறுவனங்களில் திறனை வளர்க்கக்கூடிய காரணிகள் மிகவும் குறைவாக உள்ளதை சுட்டி காட்டினார். இந்த அமைப்பின் மூலமாக, தொழில்துறையை சேர்ந்த நிபுணர்களை கொண்டு மாணவர்களுக்கு, முக்கியமாக அரசு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும் என்று தெளிவாக விளக்கிக்கூறினார்.

எடுக்கப்பட்ட முடிவுகளும், நாம் செய்யவேண்டியவைகளும்:

மைனா ராஜா அவர்கள் இந்த அமைப்பினை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவம் பற்றி கூறினார். மேலும் அவர் இதற்கு முன், இது போன்று பல அமைப்புகளில் இருந்ததாக குறிப்பிடுகிறார். அந்த அமைப்புகள் முதலில் ஆர்வமாகவும் பிறகு ஏற்பட்ட தொய்வையும் எடுத்துக்கூறினார். பிறகு பேசிய கார்த்திக் அவர்களும் சதிஷ் அவர்களும் அதையே வலியுறுத்தினர். பின்பு அவர்கள் மயிலாடுதுறையில் உள்ள நிறுவனங்களை உலக நிறுவனங்களோடு கைகோர்க்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இந்த கலந்துரையாடலில் உறுதியான முடிவுகளும் எடுக்கப்பட்டது. DJ Branding தன்னுடைய நிறுவனத்துக்கு Graphic Designer பணிக்கு உடனடி ஆட்கள் தேவையை கூறியது. மைனா ராஜன் அவர்கள் BPO and Voice Service தேவையை கூறினார். சதிஷ்குமார் அவர்கள் தன்னுடைய நிறுவனத்திற்கு JAVA தொழில்நுட்பம் பணியிடத்திற்கு ஆட்கள் தேவையை கூறினார்.

பின்பு உடனடியாக, ஜெர்மனியிலுள்ள Keyleer Korb Enterprises-க்கும் DJ Branding-க்கும் வணிக ஒப்பந்தம் கையெழுத்தானது.

More News

ப்ளீச்சிங் பவுடரை உட்கொண்டு பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல்நலம் தேறியுள்ள நிலையில் குடும்பத்தினருடன் முதல்வரை சந்தித்தார்!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்!

admin See author's posts

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை – நிவேதா முருகன் வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு!

admin See author's posts

பிக்பாஸ் : ‘நான் வெளிய போறேன்’ முடிவை அறிவித்த பிரியங்கா!

admin See author's posts

காட்டுத்தனமாக சென்ற கல்பனா பேருந்து… அடித்து நொறுக்கி தீ வைப்பு.. ஆட்டோ ஓட்டுனர் பலியானதால் ஆவேசம்..!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே தடையை மீறி மாட்டுவண்டி பேரணி நடத்திய பா.ஜ.க.வினர் கைது!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாத வடிவாய்க்காலால் விவசாயிகளின் 500 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது!

admin See author's posts

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கி மாணவர்கள் பயணம் .. கோபத்தில் நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்!

admin See author's posts

விவசாயிகளின் காப்பீடு தொகையை மோசடி செய்த வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம்!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page