25th January 2022

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் எஸ்.ஓ.எஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ் வழங்கினார்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்புடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 964 குழந்தைகளில் முதல் கட்டமாக மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த 406 குழந்தைகளுக்கு அவரவர்களின் வீடுகளுக்கே சென்று சிறுதானிய சத்துமாவு, பேரிச்சம் பழம், தேன், சிவப்புக் கொண்டைக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி, ஆகியவைகள் அடங்கிய ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கப்பட உள்ளது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் லலிதா வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து கிவ் இந்தியா, ஆக்சன் எய்டு அசோசியேசன் (சென்னை) மற்றும் நாகப்பட்டினம் ஸ்னேகா தொண்டு நிறுவனத்தின் சார்பில் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான 20 ஆக்சிஜன் செறிவூட்டிலிகளை கொரோனா சிகிச்சை மையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பணிகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் தொண்டு நிறுவனத்தினரால் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், எஸ்.ஓ.எஸ் குழந்தை கிராம தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் கணேசன், உதவி இயக்குனர் நாராயணன், சினேகா தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் கணேசன், இயக்குனர் ஜேசுரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More News

நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கம்: சென்னை ஐகோர்ட்!!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சாரங்கபாணி நினைவுத் தூணிற்கு நினைவஞ்சலி!

admin See author's posts

பிப்.,10 ம் தேதி அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்!!

admin See author's posts

மயிலாடுதுறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்!!

admin See author's posts

மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு ஸ்தூபியில் அதிமுக அஞ்சலி!!

admin See author's posts

நாகையில் 50 கிராமங்களில் நிலத்தடி நீர் உவர் நீராக மாறியதாக புகார்: ஓ.என்.ஜி.சி.யின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை!!

admin See author's posts

மயிலாடுதுறையில் வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற வந்த பெண்!

admin See author's posts

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்!!

admin See author's posts

You cannot copy content of this page