25th September 2021

மயிலாடுதுறை: கண்ணாரத்தெரு முக்கூட்டில் அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்!

மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி பகுதியை சேர்ந்த முகமது ரஃபிக் வயது (60) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த மாதம் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். எலந்தங்குடியில் இருந்து மயிலாடுதுறை வழியாக ஆடுதுறைக்கு தனது மனைவி நிஷா உடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பின்னே வந்த அரசு பேருந்து மோதியதால் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர். அதில் முகமது ரஃபிக் தலையில் அரசு பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்தில் அவரது மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அரசு பேருந்தை கைப்பற்றி ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவரை கைது செய்தனர்.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறையில் கண்ணாரத்தெரு பகுதியில் 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு வருடமாக சாலை சரியில்லாமல் இருக்கிறது இதனால் அடிக்கடி விபத்து நேரிடும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். மேலும் அந்த சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை அளித்துள்ளனர்.

Advertisement

More News

மயிலாடுதுறை: விளநகர்பகுதியில் மின்விளக்குகள் இல்லை என கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார்!

admin See author's posts

கோயில்களில் பயன்படாமல் உள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கேட்டுகளாக்கும் நடவடிக்கையில் அரசு நேர்மையாக செயல்படும் – அமைச்சர் சேகர் பாபு!

admin See author's posts

தமிழகத்தில் நாளை 15 லட்சம் தடுப்பூசி போட இலக்கு!

admin See author's posts

மயிலாடுதுறை: நாட்டு நலப்பணித்திட்ட நாளை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார் எம்.எல்.ஏ ராஜகுமார்!

admin See author's posts

தரங்கம்பாடி: ஆக்கூரில் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா!

admin See author's posts

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் பெண் தவறவிட்ட 31 சவரன் தங்க நகைகள் ஒருமணி நேரத்தில் மீட்பு!

admin See author's posts

20 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெறாமல் இருப்பவர்களுக்கு இறுதி வாய்ப்பு..!

admin See author's posts

கடலூர் ஆணவக் கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு, 13 பேருக்கு ஆயுள்!

admin See author's posts

13 லட்சம் மதிப்பிலான 7635 மதுபாட்டில்கள் ரோடு ரோலர் மூலம் ஏற்றி அழிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

admin See author's posts

You cannot copy content of this page