3rd December 2021

மயிலாடுதுறை மாவட்டம் : காவிரி அமைப்பினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து, மயிலாடுதுறை ரயில் நிலையம் முன்பு காவிரி அமைப்பினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

நம் மயிலை மண்ணை நேசிக்கும் விதத்தில் பிப்ரவரி 2014 மாயூர யுத்தம் எனும் நிகழ்வினை நடத்தி நம் மக்களை மயிலாடுதுறை மாவட்டம் என்ற ஒற்றை கோட்டில் ஒன்றிணைத்து. கடந்த பல ஆண்டுகளாக நம் மாவட்ட தேவையை அரசுக்கு கொண்டு சென்று. மேலும் பேரணி, போராட்டம், கடை அடைப்பு, நடைபாதை என பல்வேறு விதமான செயல்களில் பல அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டாண்டு காலமாக வணிகர் சங்கம், சேவை சங்கங்கள் என பலரும் முனைப்புடன் மாவட்ட கோரிக்கைகளை வலியுறுத்த தொடங்கியது. அனைத்து முன்னெடுப்புகளிலும் தன்னை மாயூர யுத்தம் இணைந்துகொண்டது.

மக்களின் கால் நூற்றாண்டு கால கோரிக்கையை ‘மாயூரயுத்தம்’ இயக்கத்தின் மூலமாகவும் “ஏன் கேட்கிறோம் மயிலாடுதுறை மாவட்டம்” என்ற கையேட்டின் மூலமாகவும் அரசின் கவனித்திற்கு கொண்டு சென்ற காவிரி அமைப்பின் தலைவர் கோமல் அன்பரசன் மற்றும் மாவட்டத்திற்காக குரல் கொடுத்த அனைத்து அமைப்பினருக்கும், மக்கள் பரிதிநிதிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதில், காவிரி அமைப்பு நிர்வாகிகள் சிவக்குமார், அகஸ்டின் விஜய், வழக்கறிஞர் சிவச்சந்திரன், சுந்தர், கவி.கார்த்தி, சமூக ஆர்வலர்கள் மருத்துவர் இராஜசிம்மன், ஆர்.கே.சங்கர், கணேசன், மயிலாடுதுறை ரோட்டரி சங்கத் தலைவர் ஜனார்த்தனன் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

You cannot copy content of this page