3rd December 2021

மயிலாடுதுறையில் அமையவுள்ள நூலகத்துக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெயரை சூட்டக் கோரிக்கை

மயிலாடுதுறையில் அமையவுள்ள சிறப்பு நூலகத்துக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயரைக் சூட்ட வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவிரி அமைப்பின் தலைவரும், சமூக செயற்பாட்டாளருமான கோமல் அன்பரசன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

நாகபட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மயிலாடுதுறை வட்ட பகுதியில் ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் ஒன்று அமைக்கப்படும் என்று தாங்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கறது. இதற்கான நிதியை நிகழாண்டிலேயே ஒதுக்கி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இந்த நூலகத்திற்கு, பல்லாயிரம் ஆண்டு பெருமையுடைய தமிழ் மொழியில் முதல் புதினத்தை(நாவல்) எழுதிய நீதிபதி வேதநாயகம் பிள்ளையின் பெயரை சூட்டுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். மயிலாடுதுறை மண்ணில் நீண்டகாலம் வாழந்து, ஊர் பெயரை தன்னுடைய பெயரோடு சேர்த்துக் கொள்ளுமளவிற்கு பற்றோடு திகழ்ந்த வேதநாயகரை கொண்டாடும் விதமாக இதற்கான அறிவிப்பையும் தாங்கள் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வேதநாயகம் பிள்ளை அவர்கள் நீதிபதியாக பணியாற்றிய மயிலாடுதுறை எனவும் காவிரி அமைப்பின் சார்பில் வலியுறுத்துகிறோம் என மனுவில் கூறியுள்ளார். மேலும், இதன் நகல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நுலகத்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர்க்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

You cannot copy content of this page