மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரண உதவி

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தமிழகம் முழுவதும் 144 குற்றவியல் நடைமுறைச் சட்டம் அமலில் உள்ளது. இதன் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அவ்வாறு சிரமப்படும் குடும்பங்களுக்கு மனிதநேயத்தோடு தன்னார்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மக்கள் நீதி மய்யம் சார்பில் கலைஞர் காலனி, திருமங்கலம், ஆனந்தகுடி மற்றும் குளிச்சாறு பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் மக்கள் நீதி மய்யம் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.என்.ரவிச்சந்திரன் தலைமையில் வழங்கப்பட்டது.

மேலும் மக்கள் நீதி மய்யம் தலைவர் டாக்டர் கமல்ஹாசன் அவர்களின் உத்தரவின்படியும் பொதுச்செயலாளர் முருகானந்தம் அவர்களின் அறிவுறுத்தலின்படியம் இந்த உதவிகளை செய்ததாக மாவட்ட செயலாளர் எம்.என்.ரவிச்சந்திரன் அவர்கள் கூறினார்.

இந்நிகழ்வில்மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிசங்கர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் செ.சுபாஷ், மாவட்ட பொறுப்பாளர் மனோகரன், ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.பி.என்.செந்தில், நகரச் செயலாளர் அகோரம், நகர இளைஞரணி செயலாளர் சேகர், உறுப்பினர்கள் பன்னீர், உமாசங்கர், சிவா, சந்திரசேகர், குமரன் மற்றும் திவாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Advertisement

More News

புதுச்சேரி முதல்வராக பதவியேற்க உள்ளரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு

admin See author's posts

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

admin See author's posts

கொரோனாவால் நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்!

admin See author's posts

உடனடியாக கட்டளை மையம் திறக்க வேண்டும் – முக ஸ்டாலின்!

admin See author's posts

லக்னோவில் ஆக்ஸிஜன் ஆலையில் சிலிண்டர் வெடிப்பு.., 2 பேர் உயிரிழப்பு .!

admin See author's posts

தமிழ்நாட்டில் மேலும் புதிய கட்டுப்பாடுகள்..மே.6 முதல் அமல்!

admin See author's posts

மறைந்த ட்ராபிக் ராமசாமி அவர்களுக்கு மயிலாடுதுறையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

admin See author's posts

மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!

admin See author's posts

இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதி!

admin See author's posts

அரசு ஊழியர்கள் 50% பேர் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.: அரசாணை வெளியீடு!

admin See author's posts

Leave a Reply

You cannot copy content of this page