8th December 2021

மயிலாடுதுறை சீர்காழி ஆகிய பகுதிகளில் அமைச்சர் மெய்யநாதன் மருத்துவமனைகளில் ஆய்வு

மயிலாடுதுறையில் உள்ள அரசு பெரியார் மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்டை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் அரசு பெரியார் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை பிரிவில் ஆய்வு செய்த அமைச்சர் அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து கபசுர குடிநீர் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மெய்யநாதன் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த சித்த மருத்துவ மையத்தில் கரோனா ஆரம்ப அறிகுறிகள் உள்ள நோயாளிகள் பயன் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துக் கொண்டார். கடந்த 2 நாட்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறைந்து இருப்பதாகவும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தொற்று குறைவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் ஆக்சிஜன் பிளான்ட் மூலம் நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் எனவும் விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார். கருப்பு பூஞ்சையின் நிறம் மாறிக் கொண்டே இருப்பதாகவும் இதனை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை என்று கேட்ட கேள்விக்கு அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஊதியம் சரியான நேரத்தில் வந்து சேரும் என தெரிவித்தார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 28 செவிலியர்களுக்கு கொரோனா தோற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து அவர்கள் இடத்தை நிரப்பும் வகையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு உடைய ஒத்துழைப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது பின்னால் பதில் சொல்வதாக கூறி அங்கிருந்த அமைச்சர் சென்றார்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ஐஏஎஸ், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஐபிஎஸ், நாகை வடக்கு திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மயிலாடுதுறை சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ராஜகுமார், சீர்காழி சட்டமன்ற திமுக உறுப்பினர் பன்னீர்செல்வம், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர ஞானவேலன், பொருளாளர் ஜி என் ரவி, செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தலைமை மருத்துவர்கள், சித்தா மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

More News

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

admin See author's posts

ஸ்பீட் என்ஜினுக்கு தடை விதிக்காவிட்டால் போராட்டம்-நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி அருண் பிரியா சென்னையில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்!

admin See author's posts

மயிலாடுதுறை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

மயிலாடுதுறை: நெல் ஜெயராமன் நினைவு தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பாரம்பரிய விதை நெல் வழங்கப்பட்டது!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆக்கூரில் சிறப்புலி நாயனார் கோவில் குருபூஜை சிறப்பு வழிபாடு!

admin See author's posts

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்!

admin See author's posts

மயிலாடுதுறை: ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர் வாகனத்தை ஆட்சியர் இரா.லலிதா வழங்கினார்!

admin See author's posts

மயிலாடுதுறை: பட்டவர்த்தியில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து கலவரம் !

admin See author's posts

மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண் கிடைக்காததால் இளைஞர் தற்கொலை முயற்சி!

admin See author's posts

You may have missed

You cannot copy content of this page