30th November 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிவ.வீ.மெய்யநாதன் ஆய்வு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வ வீ.மெய்யநாதன் அவர்கள் ஆய்வு செய்தார். தொடர்ந்து சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். உடன் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இ.ஆ.ப., அவர்கள் உடனிருந்தனர்.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள 18 லட்சம் மதிப்பிலான 6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஆக்சிஜன் இருப்பகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களின் பணியினை அமைச்சர் பாராட்டினார். மருத்துவர்களிடம் அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சித்தா கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் வகையில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் மருத்துவமனை வளாகத்தில் 6 கி.லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் இருப்பகம் ஆய்வு செய்யப்பட்டது. வெகு விரைவில் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும் சித்தா கொரோனா சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50 படுக்கைகள் உள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே குணமடைய செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் ஊரடங்கை மதித்து பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி கொள்வதை பழக்கபடுத்தி கொள்ள வேண்டும். இக்கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மருத்துவத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சிதுறை உள்ளிட்ட துறைகள் ஈடுப்பட்டு வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், இணை இயக்குநர் ராஜசேகர், துணை இயக்குநர் (சுகாதாரத்துறை) பிரகாஷ், மாவட்ட சித்த மருத்துவர் பத்மநாபன், உள்ளிட்ட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

More News

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் எலி ஒழிப்பு முகாம் நடத்த விவசாயிகள் கோரிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்த நடவடிக்கை!

admin See author's posts

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே இடப்பிரச்சினையில் லாரி டிரைவர் அடித்துக்கொலை!

admin See author's posts

மயிலாடுதுறை: பொறையார் ரோட்டரி சங்கம், தரங்கை பொது தொழிலாளர் சங்கம் மற்றும் முகநூல் நண்பர்கள் சார்பில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி!

admin See author's posts

பிரீபெய்டு சேவை கட்டணத்தை 20% வரை உயர்த்துகிறது ஜியோ

admin See author's posts

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்!

admin See author's posts

மயிலாடுதுறையில் இல்லம் தேடி கல்வி திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

admin See author's posts

‘ஜெய் பீம்’ படத்துக்காக சூர்யாவை நேரில் சந்தித்து பாராட்டிய நல்லகண்ணு” !

admin See author's posts

மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை; மரங்கள் சாய்ந்தன!

admin See author's posts

You cannot copy content of this page