26th October 2021

மயிலாடுதுறை: அரசு பெரியார் மருத்துவமனையில் நேற்று அதிநவீன சிடி ஸ்கேன் கருவியை எம்.எல்.ஏ.ராஜகுமார் திறந்து வைத்தார்!

மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ருபாய் 1 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 16 ஒளிக்கதிர்கள் கொண்ட நவீன புதிய சி.டி . ஸ்கேன் இயந்திரம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த கருவி நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது. மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருச்சி மண்டலத்தின் திருச்சிக்கு அடுத்ததாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இந்த அதிநவீன சி.டி. ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. இதற்க்கு முன்னதாக உள்ள சி.டி .ஸ்கேன் கருவி 4 கதிர்கள் கொண்டாதாகவும் இதன் மூலம் சில பகுதிகளை மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும்.

தற்போது உள்ள புதிய அதிநவீன சி.டி .ஸ்கேன் கருவி 16 ஒளிக்கதிர்கள் கொண்ட ஸ்கேன் கருவியாகும். இதன் மூலம் உடலில் உள்ள அனைத்து பாகங்களையும் ஸ்கேன் செய்ய முடியும். நேற்று முதல் இந்த ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வருவதாக தலைமை அரசு மருத்துவர் ராஜசேகர் தெரிவித்தார்.

இதற்கு கட்டணம் ருபாய் 500 மட்டுமே என அரசு நிர்வாகம் தெரிவித்தது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை திமுக நகர செயலாளர் குண்டாமணி என்கின்ற செல்வராஜ், திமுக நகர துணை செயலாளர் ஆர்.கே.சங்கர், காங்கிரஸ் நகர தலைவர் இராமானுஜம் மற்றும் திமுக உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More News

மயிலாடுதுறையில் மோடி கையெழுத்துடன் முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்கல்!

admin See author's posts

கொள்ளிடம் அருகே பண்ணையில் தீ விபத்து; 500 கோழிகள் கருகி சாவு!

admin See author's posts

செம்பனார்கோவில்: கேட்டரிங் சர்வீஸ் அலுவலகத்தில் பிணமாக கிடந்த ஊழியர்!

admin See author's posts

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுநூலக கட்டிடம், பள்ளி கட்டிடம், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்தார்!

admin See author's posts

சித்தர்காடு அருகே, கிணற்றில் விழுந்த காளையை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டு!

admin See author's posts

திருவாரூர்: கனமழையால் இடிந்து விழுந்த தியாகராஜர் கோயில் கமலாலயம் குளத்தின் சுற்றுச் சுவர்!

admin See author's posts

சீர்காழி அருகே ஏரி மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் ஆகாய தாமரையால் மூடிய அவலம்!

admin See author's posts

மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர் எழுப்புவதற்கு பூமி பூஜை போடப்பட்டது!

admin See author's posts

தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

admin See author's posts

மயிலாடுதுறை காவிரியில் எழுந்தருளிய பரிமள ரெங்கநாதர்!

admin See author's posts

You cannot copy content of this page