3rd December 2021

மயிலாடுதுறை நகராட்சியில் இனியும் பள்ளங்கள் உருவாகும் – மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதை சாக்கடை மற்றும் சீரமைப்பு பணிகளை நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி நாயர் தலைமையிலான கூட்டு ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறையில் உள்ள கழிவு நீர் நீரேற்று நிலையங்கள் மற்றும் சாலைகளில் குழாய் உடைப்பு ஏற்பட்டு பள்ளங்கள் உருவான இடங்களை ஆய்வு செய்து, குறைகளை உடனடியாக சீர் செய்து முழு அளவில் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

மயிலாடுதுறையில் செயல்படும் புதை சாக்கடைத் திட்டத்தை சீரமைப்பு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில், குடிநீர் வடிகால் வாரியம் அடங்கிய 3 குழுவினர், சென்னையிலிருந்து புதை சாக்கடை விரிவாக்க ஆலோசகர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோர் அடங்கிய கூட்டு ஆய்வு குழுவினர் மயிலாடுதுறையில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வு கூட்டத்தையும்  நடத்தியுள்ளோம்.

கூட்டம் முடிவில் குறுகிய கால தீர்வு, நீண்ட கால தீர்வு என இரண்டு கட்டமாக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுகிய கால தீர்வு :
நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கூடிய பம்ப் செட்டுகள் அதிகம் போடுவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது போன்றது.

நீண்ட கால தீர்வு:
பைப் களை முழுமையாக மாற்றுவது. நகராட்சியிடம் போதிய நிதியில்லை. அதனால் தற்போது சாத்தியமில்லை.

சிமெண்ட் பைப்கள் போடப்பட்ட்டுள்ளதாலும்., சரியான பராமரிப்பு இல்லை என்பதாலும் இம்மாதிரியான உடைப்புகள் ஏற்படுகிறது. இன்னும் சில இடங்களில் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் 30 நாட்களுக்குள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம்.” என்று பிரவீன் பி நாயர் இ.ஆ.ப. தெரிவித்தார்.

செய்தி தொகுப்பு:
ம.ஹரீஷ்
செய்தியாளர்
காவிரிக்கதிர்

Leave a Reply

You cannot copy content of this page